எவிக்ஷனுக்கு பிறகு ரியோ மகளுக்காக கேபி கொடுத்த பரிசு!

After the eviction Gabriella went to her house for Rio's daughter and sewed a shirt for herself. Rio's wife thanked him for this.

எவிக்ஷனுக்கு பிறகு ரியோவின் மகளுக்காக கேப்ரியல்லா அவரது வீட்டிற்கு சென்று அவராகவே ஒரு சட்டை ஒன்றை தைத்து கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரையிலும் இருந்து மக்கள் ஆதரவுடன் பல ரசிகர்களை தனக்கென கொண்டிருந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது ரியோவுடன் ஒரு தங்கை எனும் உறவில் அதிகமாக நட்புடன் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியுடன் கேபிரியல்லா வெளியேறிவிட்டார். இந்நிலையில், ரியோ வீட்டிற்கு எவிக்ஷனுக்கு பிறகு சென்றுள்ள கேப்ரியல்லா அவரது மகளுக்காக அவராகவே ஒரு சட்டை ஒன்றை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள  ரியோவின் மனைவி கேபிரியல்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.