தளபதி 65 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கவின்..??

Actor Gavin is said to be playing the lead role in thalapathy 65.

தளபதி 65 படத்தில் நடிகர் கவின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. இந்த பூஜையில் நடிகர் கவினும் கலந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் கவின் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கவின்..??