தளபதி 65 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கவின்..??

Actor Gavin will be working as an assistant director in the film thalapathy 65.

தளபதி 65 படத்தில் நடிகர் கவின் உதவி இயக்குனராக பணியாற்றவுள்ளார்.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை நேற்று சன் டிவி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது அதற்கான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது. இந்த பூஜையில் நடிகர் கவினும் கலந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கவின் தளபதி 65 படத்தில் கலந்துகொண்டதால் அவரும் படத்தில் நடிப்பதாக தகவல் பரவி வந்தது ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் கவினும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் டாக்டர் படத்தில் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதைபோல் தளபதி 65 படத்திலும் கவின் உதவி இயக்குநராகவே பணியாற்றவுள்ளார்.