செம ஜோடி.... மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வைரல் புகைப்படம்...!

Xavier Brito ha felicitado a Andrea en su página de Twitter al publicar una foto de Andrea con el Comandante Vijay en la imagen maestra.

சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடிகை ஆண்ட்ரியா தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் . அவரது ரசிகர்கள் ட்விட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில், சேவியர் பிரிட்டோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

unknown node