மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!!

மாநாடு படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்திற்கான முதல் பாடல் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து படத்திற்கான முதல் பாடலை தற்போது படக்குழுவினர் வெளிட்டுள்ளனர். யுவன் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.