விஷாலின் 31- வது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..!!

Filming of Vishal's 31st film has resumed at Ramoji Rao Film City in Hyderabad.

விஷாலின் 31- வது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

நடிகர் விஷால் சக்ரா படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் தனது 31 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்த திரைப்படத்தை விஷால் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.