3 நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு..!

An update on the first look poster of the movie is expected to be released as the shooting of the movie Valimai starring Ajith is over in 3 more days.

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 3 நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்றும் , ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும்,விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்துள்ளதாகவும் போனி கபூர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்னும் 3 நாட்களில் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மற்ற அப்டேட்டுகள் அறிவிக்க அதிகவாய்ப்புகள் உள்ளதால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.