ரஷ்யாவின் அதிபர் மாளிகையில் "கோப்ரா" படத்தின் படப்பிடிப்பு..??

Filming for Vikram's upcoming film Cobra is taking place at the Presidential Palace in Russia

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு ரஷ்யாவின் அதிபர் மாளிகையில்  நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவின் அதிபர் மாளிகையில் நடந்து வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான், சர்ஜனோ காலித், மியா ஜார்ஜ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு ரஷ்யாவின் அதிபர் மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வருகின்ற மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான 1 பாடல் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் அதிபர் மாளிகையில் "கோப்ரா" படத்தின் படப்பிடிப்பு..??