5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூல் சாதனை படைத்த ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9..!!

Fast and Furious 9 has grossed Rs 1,184 crore in just 5 days of its release.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 திரைப்படம் வெளியான 5 நாட்களில்  ரூ.1,184 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் திரைப்பட தொடரில் பிரபலமான வாகன ரேஸ் மற்றும் அதிரடி திரைப்படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ். இதுவரை 8 பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9வது பாகத்தை இயக்குனர்  ஜஸ்டின் லின் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்கினார். இந்த படத்தில்  மிச்சல் ரோட்ரிகெஸ்,டீசல், ஜான் சீனா, டைரீஸ் கிப்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக  அடுத்த ஆண்டு அதாவது (2021) ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் இப்படம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் சீனா, ஹாங்காங், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மட்டும் கடந்த மே 19 ஆம் தேதி வெளியானது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வெளியான 5 நாட்களில்  முழுவதுமாகரூ.1,184கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

5 நாட்களில் ரூ.1,184 கோடி வசூல் சாதனை படைத்த ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9..!!