செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் சோகத்தில் ரசிகர்கள்!

All the fans are overwhelmed with sadness as it has been reported that the protagonist of the Tamil Front series Sembaruthi is leaving.

தமிழ் முன்னணி தொடராகிய செம்பருத்தி தொடரிலிருந்து அதன் கதாநாயகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர் செம்பருத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நன்முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்தி கடந்த 800 தொடர்கள் வரை நடித்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் அவரே கதாநாயகனாக பதிவாகி விட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகன் கார்த்திக் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக தெரியாவிட்டாலும், அதிக அளவில் சமூக வலைதளங்களில் தற்போது தான் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் ஏற்கனவே தொடரிலிருந்து டேட் கொடுக்க முடியவில்லை என்பதற்காக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி நீக்கப்பட்ட நிலையில் அவர் அண்மையில் இது குறித்து பேசுகின்ற ஒரு வீடியோவில்சீரியலுக்குள்ளும் சில பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என அவரிடம் கேள்வி கேட்டதற்கு, கதாநாயகன் கார்த்திகை தான் மாற்ற வேண்டும். ஏன் என்றால் அவருக்கு சீரியலில் தற்போது நடிக்க ஆசையில்லை. படங்களில் தான் நடிக்க ஆசை என கூறியிருந்தார். ஒருவேளை இவர் சொன்னது போல கார்த்திக் படங்களில் நடிக்க ஆசை இருப்பதால் சீரியலை விட்டு வெளியேறுகிறார் என்ற சந்தேகமும் எழும்ப ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுதுதான் கார்த்திக் நடிப்பில் கர்ணன் எனும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.