இந்த வாரம் தளபதி 65 அப்டேட்...?? வெளியான சூப்பர் தகவல்..!!

It has been reported that a new update for thalapathy 65 starring Vijay will be released this week

விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இந்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத் திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான அடுத்த அப்டேட் ஒன்று இந்த வார இறுதிக்குள் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அப்டேட் வருமா என்று காத்துள்ளார்கள்.

மேலும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.