ஈஸ்வரன் பட நடிகைக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்..!

Actress Nithi Agarwal, who played the lead role in the movie Eeswaran Bhoomi in the forest area of Chennai, has been anointed by her fans with a statue

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் ஈஸ்வரன்ம் பூமி படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நிதி அகர்வாலிற்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து பால் அபிஷேகம் செய்துள்ளார்கள்.

நடிகை நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் கடந்த பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் வெளியான வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலிற்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைந்திருப்பதால் அதற்காக பாலபிஷேகம் செய்யப்பட்டு ள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த நிதி அகர்வால் இது குறித்து கூறுகையில் “நான் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் இது போன்ற நிகழ்வுகளால் நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஏற்பட்டுள்ளது.எனவும் கூறியுள்ளார்.

unknown node