#BREAKING பெரும் சோகம்! ‘சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ பிரபலம் சிவாஜி காலமானார்!

RSShivaji

தமிழ் சினிமாவில் என்னுள் ஆயிரம், மீ டியர் மார்த்தாண்டன்,சத்யா, அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும் , கோலமாவு கோகிலா, பரமசிவன், அன்பே சிவம், சொன்னா புரியாது, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி.

இதில் அவர் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் ஜனகராஜிடம் “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க”  என்று பேசிய வசனம் இன்றுவரை மீம்களில் டேம்லேட் ஆக இருக்கிறது. இந்நிலையில், 67 வயதாகும் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

இதய பாதிப்பால் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று காலை காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், 1981ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் கடைசியாக கார்கி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்