அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து.? வைரலாகும் பிரபல இயக்குனர் பதிவு.!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இவரின் உயிருக்கு ஆபத்து என பிரபல

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இவரின் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சனல் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது.

unknown node

ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவரின் சம்பந்தப்பட்ட வேறு யாரோ பதிலளிக்கவில்லை. மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாளத் திரையுலகில் பாலின சமத்துவத்திற்காகச் செயல்படும் அமைப்பான Women in Cinema Collective-க்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பினேன்.

unknown node

அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். கேரளாவில் உள்ள முக்கிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சமாக உள்ளது.

unknown node

நான் எழுப்பியுள்ள பிரச்சினை தேசிய அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பற்றியது என்பதால், தேசிய ஊடகங்கள் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unknown node