நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படபிடிப்பு தீவிரமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
unknown nodesuriya and jo [Image Source : Twitter/@SuriyaStardom]
இதற்கிடையில், சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள், அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவது வழக்கமான ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் தன்னுடைய மனைவியை ஜோதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
unknown nodeஅதனை தொடர்ந்து தற்பொழுது சூர்யா லேட்டஸ்ட் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மாஸா இருக்காருயா மனுஷன் எனவும், செம ஸ்டைலா இருக்காரு எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
unknown nodeKanguva Fan Made Posters [Image source : file image]
மேலும் இந்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
