ரஜினிக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.! டான் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில்

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.

unknown node

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

unknown node

கல்லூரிப் பின்னணியில் அமைந்த காமெடி கலந்த சென்டிமென்டை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

unknown node

தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல படங்களையும், படத்தில் பணியாற்றிய குழுவினரையும் ரஜினிகாந்த் பாராட்ட தவறியதில்லை என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்தியேனுக்கு கால் செய்து பாராட்டியுள்ளார்.

unknown node

படத்தை பார்த்து விட்டு ரஜினி ” சூப்பர் பா, படம் நன்றாக இருந்தது. நீங்க நல்ல நடிச்சிருந்திங்க கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியவில்லை” என கூறியுள்ளார். இதனை சிவகார்த்திகேயேனே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.