சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” என்று கூறலாம். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
unknown nodeஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. தற்போது படத்தின் சிஜி வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்திற்கான அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலர் இந்த படம் வெளியாகுமா..? இல்லையா..? என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்களேன்-ஐயோ.. நம்ம கண்ணு அங்கயே போகுதே..! வளைத்து நெளித்து காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா..!
unknown nodeஅது என்னவென்றால், அயலான் படத்தை அடுத்த ஆண்டு படக்குழு வெளியீட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.