பிசாசு 2 படத்தில் இணைந்த ஒளிப்பதிவாளர்... யார் தெரியுமா..?

Siva Chandakumar is said to have joined as the cinematographer in the upcoming Devil 2 film directed by Mishkin.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் ஒளிப்பதிவாளராக சிவா சாந்தகுமார் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திகே ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சிவா சாந்தகுமார் இணைந்துள்ளார். இவர் மிஷ்கினுடன் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடக்கும் போது அவருக்கு உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.