பிசாசு இரண்டாம் பாகத்தில் சந்தோஷ் பிரதீப் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்குனர் மிஸ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். குளியல் தொட்டியில் சிகெரெட் துண்டுடன் இருந்த ஆண்ட்ரியாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான சார்பட்டா படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதீப் பிசாசு 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeசார்பட்டா படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். தற்போது விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.