சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா...?

It has been reported that Surya will be completing his 40th film and will next be seen in the web series Navarasa, which will be directed by Vetri Maran

சூர்யா தனது 40 வது திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்தாக நவராசா என்ற வெப் தொடரில் நடித்துமுடித்துவிட்டு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குனர் வெற்றி மாறன் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி தற்போது வரை படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏனெனில் இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருவதால் சூர்யாவின் படத்தை தற்போது இயக்க வாய்ப்பில்லை. அதைபோல் நடிகர் சூர்யாவும் தனது 40 வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளதால் அவரும் பிசியாக உள்ளார்.

unknown node

இதனால் சூர்யா தனது 40 வது திரைப்படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்தாக நவராசா என்ற வெப் தொடரில் நடித்துமுடித்துவிட்டு இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா...?