மக்கள் செல்வன் & பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு..?

It has been reported that the shooting for the film, which will be made in collaboration with Makkal Selvan & Ponram, will start on the 12th.

மக்கள் செல்வன் & பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற 12 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் லாபம் , துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர்,மும்பைகர் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது .இதன் பின் இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும்,அது மார்ச் 23-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காமெடி, ரொமான்ஸ்,ஆக்ஷன் என பல கோணங்களில் உருவாகும் இந்த படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பூஜையானது வருகின்ற 12 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.