அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
வலிமை திரைபடதின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் நடைபெறவுள்ள 10 நாட்கள் படப்பிடிப்பு செல்லும் முன்னரே வலிமை படத்தின் முதல் பாடலை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வலிமை திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.