புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பஹத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
unknown nodePushpa 2 [Image Source: Twitter ]
முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்கள். எனவே படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அருமையாக எடுத்து வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodePushpa 2 Rashmika [Image Source: Google]
இந்த நிலையில், தற்போது புஷ்பா-2 திரைப்படத்தின் 3 நிமிட அதிரடி டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பாவின்3 நிமிட ஆக்ஷன் கட் டீஸர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8 -ஆம் தேதி தேதி வெளியாகிறது.
unknown nodePushpa 2 [Image Source: Twitter ]
ஏற்கனவே, டீசர் கட் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், பின்னணி இசை வேலைகள் தற்போது நடைபெற்று மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.விரைவில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.