"அண்ணாத்த" திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா...?

It has been reported that the film crew is planning to start shooting for Annatha from the beginning of June

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாத தொடக்கத்திலிருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாத தொடக்கத்திலிருந்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

"அண்ணாத்த" திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா...?