விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’.அதனை சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கிட்டதட்ட படப்பிடிப்பை முடித்த கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது விஜய் ஆண்டனியின் 14-வது படமாக உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தினை வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node