ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படம் 2019-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதனை தொடர்ந்து பூமி ஓடிடியில் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த “அகிலன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
unknown nodeAgilanFromMarch10 [Image Source : Google ]
இந்த படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
unknown nodeAgilan box office [Image Source : Twitter]
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது.
unknown nodeSensationalAgilan [Image Source : Twitter]
இந்த நிலையில், படம் வெளியான 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 2 நாட்களில் 7.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.