காடன் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..??

It has been reported that the Cotton movie released yesterday has collected 2.50 crores in Tamil Nadu alone on the first day

நேற்று வெளியான காடன் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 2.50கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் புல்கிட் சாம்ராட், டின்னு ஆனந்த், அஸ்வின் ராஜா, சோயா ஹுசைன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்ற நிலையில், வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 2.50கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.