இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
unknown nodeஇந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இதையும் படியுங்களேன்-ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்…எனக்கு பதில் தனுஷ் நடிப்பார்…சூப்பர் அப்டேட் கொடுத்த பார்த்திபன்.!
unknown nodeநேற்று வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் நாளை தொடர்ந்து படம் இரண்டாவது நாளாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
unknown nodeஇந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படம் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.