கமல் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்.!எந்த படம் தெரியுமா.?

It has been reported that actor Sathyaraj will first play the role played by Prakashraj in Kamal's Hunting Game.

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யராஜ் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் கமல்ஹாசன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு.கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யராஜ் தானாம்.ஆனால் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுக்க படக்குழுவினர் அருண் பாண்டியனை அணுகியுள்ளனர் .அவரும் மறுக்கவே பிரகாஷ் ராஜை படக்குழுவினர் அணுகியதாகவும், அவர் சம்மதிக்க அந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்ததாக கூறப்படுகிறது.