தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது.
unknown nodeஇந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.
unknown nodeபடத்திற்கான டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். முன்னதாக இந்த படம் ஜூலை மாதம் வெளியாகவிருந்த நிலையில், பின்னர் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
unknown nodeஅந்த வகையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள்.