"நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

NenjamMarappathillai movie has collected 1.36 crores in Chennai

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சென்னையில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது, வெளியான நாளிலிருந்து தற்போது வரை சென்னையில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், இதுவரை சென்னையில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.