படத்தின் வசூலை பற்றி ஒரு நடிகரிடம் கேட்காதீர்கள் -சீவா..!

In a recent interview, actor Jeeva told an actor not to ask about the film's collection

நடிகர் ஜீவா சமிபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒரு நடிகரிடம் படத்தின் வசூல் பற்றி கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திலிருந்து 2 பாடல்களும் டிரைலரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது என்னவென்றால், இந்த திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் ராஜசேகர் மிகவும் நன்றி என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு தனது கடந்த காலப் படங்களில் வெற்றி படங்கள் மற்றும் தோல்வி படங்களை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். ஒரு நடிகரிடம் படத்தின் வசூல் பற்றி கேட்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்.