கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் இயக்குனர் வசந்தபாலன்..!!

Director Vasanthapalan has returned home recovering from a corona infection

இயக்குனர் வசந்தபாலன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மே 5 ஆம் தேதி இயக்குனர் வசந்த பாலன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வசந்தபாலன் தொற்றில் இருந்து மீண்டு நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மேலும் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு மெல்ல பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்களாம்.