ஈஸ்வரனை அடுத்து தெலுங்கு நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் சுசீந்திரன்.!

Director Suchindran is said to be directing the next film starring Munch Manoj, son of Telugu actor Mohan Babu.

இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்ச் மனோஜ் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன் .சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் ஜெய் நடிக்கும் இரு படங்களை இயக்கியுள்ளார்.அதனை தொடர்ந்து இவர் மீண்டும் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும்,அதனை ஈஸ்வரன் படப்பிடிப்பின் போது இருவரும் முடிவு செய்தததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக தெலுங்கு நடிகரை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான மஞ்ச் மனோஜ் நடிக்கும் படத்தினை சுசீந்திரன் இயக்க உள்ளதாகவும் , தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சுசீந்திரன் ஆந்திரா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.