இந்தி படத்தினை இயக்க ரெடியாகிறாரா இயக்குனர் ஷங்கர்.?ஹீரோ இந்த பாலிவுட் நடிகரா.?

It has been reported that director Shankar is going to direct a live Hindi film soon and has met actor Ranveer Singh Shankar for the same.

இயக்குனர் ஷங்கர் விரைவில் நேரடி இந்தி படமொன்றை இயக்க உள்ளதாகவும், அதற்காக நடிகர் ரன்வீர் சிங் ஷங்கரை சந்தித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதனை குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் விரைவில் நேரடி இந்தி படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அதற்காக பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் சென்னைக்கு வந்து இயக்கு ஷங்கரை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலை பாலிவுட் ஊடகங்கள் உறுதிபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.இந்தியில் ஷங்கர் இயக்கும் படத்தினை இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் , அதற்கான பேச்சுவார்த்தை மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இந்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.