இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்.!

Default Image

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன், உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் அமீரின் தயார் பாத்துமுத்துபீவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.  தனது அம்மாவை இழந்து வாடும் அமீருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆறுதல்களையும், பாத்துமுத்துபீவி மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” தமிழ் தேசிய போராளி தம்பி அமீர் அவர்களின் தாயார் மறைவு செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அன்னை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்