இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் “லியோ”. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeleo [Image Source : Twitter]
த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeLEO CAST [Image Source : Twitter]
இந்த நிலையில், “லியோ” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படம் வெளியாகும் முன்பே கேரளாவில் எத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இணையத்தில் கசந்துள்ளது.
unknown nodeleo [Image Source : Twitter]
அதன்படி, லியோ திரைப்படம் கேரளாவில் மட்டும் 16 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு மார்க்கெட் மிகவும் அதிகம் எனவே, லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 16 கோடி ஆகியுள்ளது படத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பதை காட்டியுள்ளது.