இன்று வெளியாகும் கர்ணன் டீசர்....வெறித்தனமாக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்.!

Fans are eagerly awaiting the release of the teaser of Dhanush starrer Karnan today.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நாளை இரவு 7.01 மணிக்கு கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்று படத்தின் டீசர் வெளியாகும் என்பதால்  தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.