Dhanush : அந்த விஷியத்திற்கு தனுஷ் அடிமையா இருந்தாரு! சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த ரோபோ ஷங்கர்!

நடிகர் தனுஷ் பற்றி அடிக்கடி சில பரபரப்பான தகவல் கிளம்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என சில பத்திரிகையாளர்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்நிலையில், அதனை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ரோபோ ஷங்கர் தனுஷ் குடி பழக்கத்திற்கு சற்று அடிக்ட் ஆகா இருந்தார் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” என்கிட்ட இருக்கும் ஒரு விஷயம் அவர் கிட்ட இப்போது இல்லை என சூசகமாக பேசிவிட்டு தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர் ” நான் முன்னாடி மிகவும் மது அருந்துவேன். அதைபோல் தனுஷ் சாருக்கும் முதலில் என்னைப்போலவே அந்த பழக்கம் இருந்தது.
பிறகு தனுஷ் சார் அந்த பழக்கத்தை முற்றிலும் குறைத்துவிட்டார். எல்லாரும் மனதை ஒரு நிலை செய்வதற்காக மது அருந்துவார்கள். சிலர் பார்ட்டிக்கு சென்று அங்கு மதுகுடிப்பார்கள். அப்படி நான் குடிப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் என்னிடமே அதேயே நிறுத்துங்கள் என்று கூறிவிட்டார். அவரும் குடிப்பதை பிறகு நிறுத்திவிட்டார்” என ரோபோ ஷங்கர் சீக்ரெட்டான தகவலை கூறியுள்ளார்.
மேலும் தனுஷ் பற்றி எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கர் ” முதலில் தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுத்த மனிதர் இல்லை வாழ்கை கொடுத்த மனிதர். ஒரு தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒருவருவருக்கு மாரி படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க விட்டு வேடிக்கை பார்த்தவர். அப்படி செய்வதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை.
மாரி 1, மாரி 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பில் தினமும் நான் தனுஷ் சார் வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை தான் சாப்பிட்டேன். அது மட்டுமில்லை தனுஷாருடன் தான் இணைந்து தான் சாப்பிடுவோம். பிறகு என்னுடைய கல்யாண நாள் தினத்தன்று எனக்கு தனுஷ் ஜெயின் போட்டுவிட்டார். இப்படி பல உதவிகளை எனக்காக தனுஷ் செய்து இருக்கிறார்.” எனவும் ரோபோ ஷங்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
மேலும் ரோபோ ஷங்கர் தனுஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிவித்திருந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு அதில் ” தனுஷ் இப்போது சாராயம் குடிப்பதை நிறுத்தியுள்ளார் – ரோபோ சங்கர்” என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025