சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கும் தேசிங்கு பெரியசாமி..? அவரே சொன்ன உண்மை தகவல்.!

தமிழ் திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு

தமிழ் திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

unknown node

இந்த அற்புதமான படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்ததாகவும், அதற்காக ஒரு சூப்பரான கதையை எழுதி அதையும் ரஜினியிடம் அவர் கூறியதாகவும் கடந்த ஆண்டிலிருந்து தகவல்கள் பரவி வந்துகொண்டே இருக்கிறது.

இதையும் படியுங்களேன்-செஞ்சு வச்ச மெழுகு சிலை நீங்க தான்…குட்டை பாவாடையில் கையில் கேக்குடன் ஹன்சிகா.!

unknown node

இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த போது அவரிடம் நீங்கள் அடுத்த படம் ரஜினிகாந்துடன் பண்றீங்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த தேசிங்கு பெரியசாமி  இல்லை என்று கூறியுள்ளார்.

unknown node

ஆனால் , நான் ரஜினி சாருடைய திவீர ரசிகராக இருப்பதால், அவரை வைத்து ஒரு படம் இயக்க எங்கு ஆசையையும் இருப்பது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். தேசிங்கு பெரியசாமி தனது இரண்டாவது படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.