நேற்று காலையில் இருந்தே இருந்தே சமூக வலைதளத்தில் #இருள்ஆளப்போகிறது என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி கொண்டே இருந்தது. இதனைப் பார்த்த பலரும் இது எந்த படத்திற்கான அப்டேட் என்று தெரியாமல் குழம்பி வந்தனர். இது எந்த படத்திற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்த அறிவிப்பு இதற்கு முன்பு அருள் நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமான்டி காலனி படத்தினுடைய இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு தான். முன்னதாகவே இரண்டாவது பாகம் உருவாகி வருவதாகவும் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவியது.
இதனையடுத்து, தற்போது பட குழு அதிகாரப்பூர்வமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தில் அருள்நிதி, பிரியா பவானிசங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ஆர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோர் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். வீடியோவில் வரும் காட்சிகள் மற்றும் பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
unknown node