குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபிகா படுகோன்..!!

Actress Deepika Padukone has been diagnosed with a corona infection

நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, கடந்த வாரம் தீபிகா படுகோன் தந்தை பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபிகாவின் குடும்பத்தினர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். குடும்பத்தினரை காண வந்த தீபிகா படுகோனேக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா தொற்று உறுதியானது குறித்து எந்த தகவலையும் வெளியீடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.