இன்று பூஜையுடன் தொடங்கும் டான் படப்பிடிப்பு..!

It has been reported that the shooting for the upcoming movie Don starring Sivakarthikeyan will start today in Coimbatore with Pooja.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கோயம்புத்தூரில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பை கோயம்புத்தூரில் இன்று பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.