சமந்தாவின் முன்னாள் கணவருடன் டேட்டிங்கா..? மனம் திறந்த பொன்னியின் செல்வன் நடிகை.!!

நாக சைதன்யாவுடனான டேட்டிங் வதந்திகள் குறித்து சோபிதா துலிபாலா இறுதியாக பேசியுள்ளார்.

sobhita dhulipala and naga chaitanya

நாக சைதன்யாவுடனான டேட்டிங் வதந்திகள் குறித்து சோபிதா துலிபாலா இறுதியாக பேசியுள்ளார்.

நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்ததாக கடந்த ஆண்டு  வதந்திகள்  கிளப்பியது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், சில இணையத்தில் வைரலானதே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக பரவும் வதந்திக்கு காரணம் என்று கூறலாம்.

unknown node

sobhita dhulipala and naga chaitanya [Image Source : twitter/@Snooper_Scope]

இந்நிலையில், நடிகை சோபிதாவும் நடிகர் சைதன்யாவும் எந்த ஒரு  நேர்காணல்களிலும் தங்கள் வதந்தியான உறவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகை சோபிதா ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்வில் கலந்துகொண்டபோது இந்த வதந்திகளைப் பற்றி பேசியுள்ளார்.

unknown node

SobhitaDhulipala [Image Source : twitter/@Sumanthmeda]

இது குறித்து பேசிய சோபிதா ” எனக்கு சினிமா துறையில் ஆர்வம் மிகவும் அதிகம். நான் என்னுடைய கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அறிவு இல்லாமல் பேசுபவர்களுக்கு, நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாதபோதும், அது என்னுடைய தொழில் அல்லாதபோதும் விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.

unknown node

Vanathi [Image Source : twitter/@sobhitaD]

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி நல்ல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.  மணிரத்னம் சார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் நடித்தது எனக்கு மிகவும் பெரிய விஷயம்” என கூறியுள்ளார்.