நடிகர் நானி தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள “தசரா“ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeDasara [Image Source: Google ]
இந்த திரைப்படத்திற்கு இசையமையைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
unknown nodeDasaraTeaser [Image Source: Google ]
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு பகுதியாக படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது.
unknown nodeஅதன்படி, தசரா திரைப்படத்தின் டிரைலர் வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே, தசரா திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. டீசரில் “நானி இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் புதிய லுக்கில் இருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.