கொடூர லுக்கில் நானி... மிரட்டலாக வெளியானது 'தசரா' டீசர்..!

நானி நடிப்பில் உருவாகும் "தசரா" திரைப்படத்தின் டீசர் வெளியானது.

நானி நடிப்பில் உருவாகும் “தசரா” திரைப்படத்தின் டீசர் வெளியானது.

நடிகர் நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்“தசரா“.இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

DasaraTeaser

படத்திற்கு இசையமையைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

unknown node

டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றே கூறலாம். படத்தில் நானி குடி பழக்கத்துக்கு அடிமையான மனதராக நடித்திருக்கிறார் என தெரிகிறது.

unknown node

படத்தின் தமிழ் டீசரை ரை தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தசரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.