வடசென்னை 2..? தனுஷின் 50-வது படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நடிகர் தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம்  வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை

நடிகர் தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம்  வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தனுஷின் 50-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் வரும் எனவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் இது வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் எனவும், மற்றோரு பக்கம் இது தனுஷ் இயக்கப்போகும் படம் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே இது என்ன படம் என்பது குறித்து பட தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.

மேலும் ஏற்கனவே தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தில் ,எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.