இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே வந்து திரையரங்கை ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சூர்யா அதிர வைத்தார். படத்தில் அவர் நடித்த அந்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. விரைவில் விக்ரம் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது.
இதற்கிடையில் சூப்பரான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சியான் விக்ரம் தானாம். ஆனால் கதாபாத்திரம் மிகவும் பெரிதாக இருந்ததால் தான் நடிக்கவில்லை என்று விக்ரம் மறுத்துவிட்டாராம்.
எனவே, இதனால் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் இரண்டாவது பாகத்தில் சீயான் விக்ரமுக்கு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல ஒரு மாஸான கதாபாத்திரத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். எனவே விக்ரம் 2 படத்தில் சீயான் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் லோகேஷ் தற்போது தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.