நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் டிவிட்டரில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் ஒன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பா அல்லது வேறேதுவும் அப்டேட்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
unknown node