நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

Actor Daniel Balaji has been diagnosed with a corona infection and admitted to a private hospital

நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் பொல்லாதவன், வடசென்னை, பிகில், போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக வலம்வருபவர் டேனியல் பாலாஜி. இவருக்கு இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.